திங்கள், 30 நவம்பர், 2015

உன் பெயர் என்ன...?




உன் கைகளைப் பற்றிக்கொண்டு

நரைமுடிகள்

சிரிக்கும் போதும்

அவற்றின் அதிகரிப்பை

கணக்கிட்ப்படியே

நடைபோட 

ஆசைக்கொள்ளலாம்...!
ஏழு ஸ்வரங்களுடன்

முட்டி மோதி

ஏழு அதிசயங்களையும்

மிஞ்சி எட்டாவததிசயமாக

என்னிதய வாத்தியத்தில்

உனக்காக ஒரு 

இசையை மீட்டிட 
எண்ணம் கொள்ளலாம்...!

என் அறிவை ஏமாற்றி

எனக்குள்ளே இயல்பாகும்

என் அறியாமையில்

உன் அன்பை ஏற்றிட

தோனலாம்..!

ஆயிரம் விளக்குகள்

ஓர் இடத்தில் ஒளிர

அந்த பிரகாசத்தின்

விட்டுக்கொடுப்பில்

வாழ்க்கை நடத்திட

விரும்பலாம்...!

உன் அன்னைக்கு

இன்னொரு சேயாகவும்

உன் நீண்ட வாழ்க்கைப்

புத்தகத்தின் ஏடுகளாகவும்

எதிர்ப்பாக்கலாம்...!

காலத்தின் மௌனம்

கலைத்து- அது 

உன் பெயரை என்

செவிகளின் மென்சவ்வும்

அதிர......

இரைச்சலின்றி தெளிவாக

சொல்லிவிட்டுச் சென்றால்....!
...பிரிய சகி...

மலையகப் பிள்ளைகளின் குரல்



எப்போதும் வீசும் 

எம் தந்தையர்களின்
மது வாசத்தால்
வாடிப் போகும் மலர்களின்
மரணத்திலிருந்து
பேசுகிறேன்...!

மதுவின் ஆட்ச்சியில்

ஒழுங்கில்லா வாழ்வின்
சின்னமாய்....
அடையாளப் படுகிறது
எம் சமுதாயம்...!

மனைவி பிள்ளைகளின்

பாசத்திற்க்கு அடிமையாகிட
தயங்கிடும் சில ஆளுநர்கள்
மதுவின் பாவவலையில்
சிக்குண்டு அடிமையாகி
தடுமாறி வீழ்ந்துகிடக்கின்ற...!

மதுவின் வீரத்தால்

தந்தையர்களில் உட்புகுந்திடும்
கோழைத்தனத்திலிருந்து
தாய்மார்களை காக்கும்
முயற்சியில் தொலைந்துடுகிறது 
பிள்ளைகளின் நிம்மதி...!

ஆடம்பர ஏற்பாடுகளோடு

ஆரம்பமாகும் விழாக்களின்
கலவர முடிவில்
தோற்றுப் போகிறது
பிள்ளைகளது மகிழ்ச்சி...!

குறிக்கோளற்ற

குடும்ப பிரச்சினைகளின்
அறியாமையில் சிக்கி
குன்றிவிடுகிறது
பிள்ளைகளின் 
சிந்தனை வளர்ச்சி...!

மது விழுங்கிய வாய்

உமிழும் முதிர்ச்சியான
நீச வார்த்தைகளில்
பள்ளி போதிக்கும்
நாகரிக பழக்கங்களும்
செவிகளில் பட்டு
தெறிப்படைந்துவிடுகிறது...!

இதுதான் வாழ்க்கையென
வடிவமான நம் மலையகமும்

இளைஞர்களின் மாறுப்பட்ட
நடையால்
மாற்றம் பெறலாம்...!

இனிவரும் நம் 

பிள்ளைகளுக்காவது
புதியதொரு மமைலையகத்தை
அமைத்து கொடுப்போம்...!

அனைத்து பிள்ளைகளும்

நேசிக்க....
மது அருந்தா தந்தையர்களை பிறப்பிப்போம்...!

...பிரிய சகி...

லௌகீக விடுதலை



எரிகின்ற என் 
வலிகளை நனைத்திடும்
நதி நீராக உன்
அன்பு மொழி 
என் செவிகளில் 
புரண்டோடுகிறது...!

இன்னும் சில வினாடிகளில்
என் முழு இதயமும் 
நிரம்பிட கூடும்...
அவை என் வார்த்தை 
வழியே ததும்பிடவும் கூடும்.!

கண்களில் பசளைநோய்
குடிவந்து செய்யும் 
பாசாங்கில்....
காய்ந்து கிடக்கும் 
கன்னங்கள் 
நனைந்திடக் கூடும்...!

அபினில் லவிளைந்த 
ஆசையின் உச்சத்திலிருந்து
விழும் பதற்றத்தில் 
உடலென காணும் 
உன் உள்ளத்திற்கு
அத்தருணத்தில் மலரும்
என் உதடுகள்
ஒத்தடமிடக் கூடும்...!

மெய்யை பொய்யாக்கிடூம்
உடைகளை கிழித்துக் கொண்டு உணர்வுகளுக்கு உபகாரமாய் உதயமாகும் 
உணர்ச்சியின் வேகம்
பூசப்பட்ட வெட்கம் மறந்து
பாச அணுக்கள் கோடி
சேர்ந்து உருவான
உன் தேகத்தை கட்டி
அனைத்திடக் கூடும்...!

இவை எதுவும் அசையாமல்
என்னுள்ளேயே 
தேங்கிடவும் கூடும்...!

ஆனப்போதும்....,
உன் காதலை சுவாசிக்க
தவிக்கின்ற தவிப்பிற்க்கும்...
என் மனதில் நிலையான
நிலையற்ற காதலின்
வெறுப்பிற்க்குமான
மோதலில் என் மூச்சு 
நின்றிடவும் கூடும்...!

இவை எதுவும் 
சில வினாடிகளில் 
நடந்தேறாமல் இருந்திட
உன் அன்பினால்
என்னிதயம் நிரம்பாமல்
பார்த்துக்கொள்...!

நொடிப்பொழுதுகளில்
என் உணர்வுகளை 
அறுத்தெறியப் போகிறேன்
எனக்குள் பழகிப்போன
வலிகளோடு...!

...பிரிய சகி...

இம்சைதான் நீ




என் நாடி நாளங்களின் 
இடைவெளிகளில் 
இங்கிதமாய் இன்னலின்றி
இருக்கமாய் இணைந்து,

என்னுள் ஓடித்திரியும் 
செங்குருதிக்கு
இசை வழங்கி
ஒரு விதமான
போதையை ஊட்டுகிறாய்...!

இமை மூடிய 
விழிகளிலிருந்து
இரகசியமாய்
இதழ்களில் இழைந்து,

உன் பார்வை 
உச்சரிக்கும் மந்திரத்தால்
உதடுகளை சுருக்கி
புன்னகையை 
புணர்த்தி விடுகிறாய்....!

இருகி கிடக்கும்
இரசணையற்ற இதயம்
உன் குணமான 
குறும்புகளால்
குலைந்து இலகி
வலிய தான் பார்க்கிறது...!

இயந்திரமாய்
இயங்கிக்கொண்டிருந்த
என் பொய்யான மெய் 
தடல்புடலாய் 
உத்வேகமடைகிறது...!

என்னில் வரண்டுப்போன
பாசத்திற்க்கு 
இரையாகிவிடுகிறது.
உன் நேசத்தில் பூத்த 
புன்னகையின் 
இலாவணியம்....!

இருந்தும்
இந்த முரண்பட்ட
மனதிற்கு 
இம்சைதான் நீ....!

....பிரியசகி....

நீ வருவாயென...






உன் வார்த்தைகளோடு
கலக்கப்படாத என்
உணர்வு......
தன்னுடலையும் மறந்து
அண்டவெளியிலேயே
அலைமோதுகிறது.....!

என்னுடலுக்குள் 
தங்கியிருக்க 
விரும்பாத என் ஆத்மா
உன்னை காற்றிலே
தேடிட முயற்சிக்கிறது....!

இதயம் நிரம்பிய 
ஆசைகளோடு உன் 
பாசத்தை எனக்குள்
மௌனமாக்கிய நீ
என் வெறுப்பின் 
முணுங்களுக்கேனும்
இசையாக இல்லாத
இந்நேரம்....,

என் ஒட்டுமொத்த
உணர்வுகளையும்
இழந்த நிலையிலும்
என்னுள் மிஞ்சிருக்கும்
ஏக்கம் மட்டும்
அழிந்து ஒழிவதாயில்லை...!

அன்பே பொய் என
ஒதுங்கச் சொன்னேன்
சன்னதம் அடக்கி
ஒதுங்கிவிட்டாய்....!

நீ திரும்பிய
அந்த நொடியில்
அனாதையான 
என் பாசம்.....,

உன்னை மீண்டும்
திரும்பச் சொல்லி
கதறியது
உன் செவிகளில்
கேட்டிருக்க வாய்ப்பில்லை....!

மனதுக்குள் எத்தனையோ
கேள்விகள்.....
விடைகளுக்காய்
அலைமோதிய
அத்தருணம்....
கதறலும் ஊமையாகி
மூர்சையானது.....!

எனக்குள் நானாக
சேர்த்துக்கொள்ளாத
உன் பாசம்.....
இப்போது நீயின்றி
என்னிதயத்தில்....!

உன் அன்பிற்குள்
சுருங்கிப் படுத்துக்கொள்ள
ஒவ்வொரு நொடியும்
ஏங்கி ஓயும்
என்னை....
மீண்டும் நேசிப்பாயா.....?

....பிரியசகி....

விடியும் வரை




முடிந்த வரை விரைவாக
இந்த இராத்ரிகளை
துரத்திடத்தான்
பார்க்கிறேன்....!

என் நித்திரையை
நிர்மூலமாக்கி
என் சிந்தனைகளை
சிதைத்திடும்
இந்த இராத்திரிகளின்
நிலவாய் நான்
தினம் ஒளிர்கையில்....!

உடுக்களாய் 
உறவுகள்....
என்னைச் சுற்றி
ஏராளமாய்..
இருந்தும் தனித்தே
தேய்கிறேன்...!

சிரிப்பின் போர்வைக்குள்
எப்படியோ....
பகல் பொழுதுகள்
நகர்ந்துவிடுகின்றன...!

என் குறும்புகளையும்
முடக்கிவிடுகிறது
இதயம் உருக்கும்
இந்த இராத்திரிகள்...!

அசலம் கடந்தாவது
விடியலை தொடத்தான்
போறாடுகிறேன்...,

இந்த போராட்டத்தின்
அழுகையில்
சோர்ந்துபோய்
விடியலின் 
நெருக்கத்தில் தான்
உறங்கிக்கொள்கிறது
ஓயாத என் சிந்தனை....!

இன்றாவது 
இரவு வானிலேயே
தூங்கிக்கொள்ளும்
முயற்சியில்....,

ஒளி அணைத்த
அறைக்குள் 
என் தனிமைக்குத்
துனையாக
சுற்றித்திரியும்
மிண்மிணிப்பூச்சிகளை
எண்ணிக்கொண்டு
நான்......!

....பிரியசகி....

நான் காணாத நீ....


வாசம் வீசும் 
பூக்களெல்லாம் தன்
வாசங்களை பரிசாக 
காற்றிடம் 
கொடுத்துவிடுகின்றன....!

நான் போகும் 
இடங்களில்
என் நிழல் பதியும் 
சாலை முழுதும்;

புன்னகை பூத்த
பூக்களின் பரிசை 
குவித்துவிடுகின்றது
மென்மையை மென்று வரும் 
மெல்லிய காற்று...!

என் நாசியினூடே 
உள்ளே புகுந்திடும் 
காற்று உன் பெயரை
மட்டும் இரகசிய கீறலாய்
கீறி விடுகிறது....!

என்னுள்ளே
ஆங்காங்கே கிடக்கும் 
சில காதல் 
வார்த்தைகளையும்
கோர்த்து.... உனக்கான
கவிதையொன்றினை 
எழுதி அதனை 
என் உயிர் அணுக்கள் 
ஒவ்வொன்றிலும் 
உயிர்ப்பித்தும் விடுகிறது....!

அந்தக் கவிதையை 
உன் உயிர் அணுக்களோடு 
சேர்த்திடும் முயற்சியில்
என்னுள் பாசத்தை 
விளைத்திட்டது போலும்
நான் சுவாசித்த, 
என் உயிர் மீட்டுகின்ற 
காற்று....!

இப்போதெல்லாம்
நான் கண்டுணராத
பூக்களின் வாசத்துடன் 
உணர்வுகளோடு மட்டும்
பதிந்த உன் வாசத்தையும் 
எடுத்து வருகிறது;

என் சுவாசப்பை வரை 
சென்று என்னிதயத்தோடு 
உறவாடி நான்
அறியாத என்னை
அறிந்திடும் 
அறிவான காற்று....!

என் இதயத்தில் 
முளைவிட்ட 
வார்த்தைகளால்
கோர்க்கப்பட்ட என் கவிதை 
உன் உள்ளத்திற்க்கு 
சமர்ப்பணம்.....!

....பிரியசகி....

மலரும் மொட்டொன்று பிறக்கையில்




கண்ணாடி தெளிவிற்க்குள்
புன்னகையின் முனங்களில்
இதழ் அலைய
அதில் இரகசியம் 
ஒழிகைய
அழகு நனைகிறது....!

மோகன மோட்சம்
புதிதாய் பிறந்து
எண்ணங்களை புரட்டிவிட்டு
மூப்படைந்து
வசிய துளிக்குள்
மௌனமாகையில்
யௌவனம் கரைகிறது....!

தங்கை என் கைகோர்த்து
நெடுஞ்சாலை வழியே
நடந்து செல்கையில்
கடந்து சென்ற
காற்றோடு கலந்து
கோர்ந்திருந்த கைகளின்
ஸ்பரிசத்தோடு உறவாடி
சென்றது....!

வீட்டிற்குள் தம்பியோடு
போட்ட செல்லச் சண்டையில்
என்னிலிருந்து விடுப்பட்ட
தனிமையோடு
தவறிவிடப்பட்ட அந்த ஒன்று...,

எங்கே விடுபட்டது...?
என யோசிக்கச் செய்து
மீண்டும் இணைந்திட்ட
அதே தனிமையோடு
தொற்றிக்கொண்டது...!

நான் கொஞ்சிய
மழலையோடு மலர்ந்திட்ட
பாசத்தில் பூத்த
மென்மையில்...
அதுவும் ஒரு மலராகி
என்னிரு பக்க கன்னங்களிலும்
பூசி விளையாடிக்கொள்ள சொல்லி
கெஞ்சியது...!

தோழியோடு தோள் சாய்ந்து
குரங்கு சேட்டைகளோடு
எடுத்துக்கொண்ட
சுயப்பதிவில்
இடைப்புகுந்து
கட்புலன் இல்லா உருவமாய்
வரிகளற்ற பாடலோடு
என் இதயத்துள்
உலா வரலானது...!

நண்பனோடு 
அரட்டையடித்து
நட்புணர்ந்து 
பேசிய வேளையில்
ஒழிந்து நின்று 
வேடிக்கைப் பார்த்திட்ட 
அதன் ஏக்கத்தை 
புரிந்துக்கொள்ளச் சொல்லி
வற்புறுத்தியது....!

அம்மா மடிமீது 
குழந்தையாகி
குந்துகையயில்
இலகிய இதயசாரலோடு
போட்டியிடுவதற்காய்
என் சிறு வெற்றிடத்திலிருந்து
முளைத்திட்ட அதை
மணந்திட ஆசைக்காட்டியது...!

இறுதியாய் இதயம்
இளைப்பாறும் இந் நேரத்தில்
சத்தமில்லா சங்கீதமாய்
என் வாழ்வின் பயன
லயத்தோடு இளைந்திட்ட
அந்த மறைப்பொருளை
இதயத்தில் இறுக்கி
"நீ யார். ?" என கேட்க...,

"உன் வாழ்வோடு
ஒட்டிக்கொள்ள 
உன் பருவ ஏவலில்
உன் உள்ளத்திலிருந்து
பிறப்பிக்கப்பட்ட
ஓர் புனிதம்..." என்கிறது...!

ம்ம்ம்ம்ம்.....
என் சுவைகளுக்குள்
புதிதாய் பிறக்க
காதல் சுவை 
கருகொள்கிறது போலும்
என் இதய அறைக்குள்...!

ஸ்ஸ்ஸ்....
நட்சத்திரங்கள் எல்லாம்
ஒற்றை கண்ணடிக்கின்றன.
விடியும் வரை காத்திருக்கும்
விடிவெள்ளிக்கு பதில் 
சொல்லவும் வேண்டும்.
இரவை கொஞ்சம்
அமைதிபடுத்துங்கள்....,

இறுதி சடங்கில்
காதல் உணர்த்தும்
அந்த உறவை 
தேர்ந்தெடுக்க
வேண்டாமோ....!

....பிரியசகி....

நிலவின் குளிர்ச்சிக்குள் ஓர் உள்ளம்




அவ்வப்போதான உன்
திட்டல்களும்
என்னை தாலாட்டும்
இரகசியம் 
அறிந்திருக்கிறது....

மழலையாய் 
நானிருக்கையில்
என் செவிகளில் 
ருசித்த என் 
தாயின் கொஞ்சல்கள்
மறந்துபோனபின்....

உன் கொஞ்சல்கள்
மீண்டும் என்னை
குழந்தையாக்க
நீயே என் தாயாய்
என் உள்ளம் கோதி
நிற்கிறாய்....
என் குணங்களுக்கு
சான்றாய்....!

உன் திட்டல்கள்
என்னை 
தாலாட்டுகையில்
உன் அன்பிற்குள்ளேயே
உறங்கிக்கொள்கிறேன்
தினம்....!

....பிரிய சகி....

கண்ணாடிக்குள் நானல்ல...





















என் வெறுமையில்
வாசம் வீசிய தனிமை
என் இளமைப் பருவ
காதலானது...!

என்னை முழுதாய்
நேசித்த
அந்த கருமை நிறைந்த
தனிமையை...., 

துனையாக்கிக்கொள்ள
மஞ்சள் கயிறு நீட்டி
மந்திரமும் 
உச்சரித்தது...,

என்னை வடிவமாக்கும்
அழகிய ஜடத்துக்கு
அப்பால் நின்று
இந்த உலகை
வேடிக்கை பார்க்க
கற்றுக்கொண்ட
(நான்) என் ஆன்மா.....!

....பிரியசகி....