திங்கள், 23 மே, 2016


அவனுள் வாழும்
அழகோவியம்
அவன் 
ஆழமான அன்பால்
அதிசய அணைப்பால்
அழகாகிறது...!

என் மனப்புத்தகத்தில்

என் மனப்புத்தகத்தில்
உணர்வுகளின்
அர்த்தங்களை
புரட்டிப்பார்க்கலானேன்....

எல்லா ஏடுகளிலும் 
உணர்வுகள் மட்டுமே
தொடர்கிறது....

அர்த்மாக்கப்பட்ட
அர்த்தங்கள்
ஆதாரமின்றி
அழிந்துவிடுகின்றன...

என் பார்வை 
கதிர்களில்....!
ம்ம்ம்.... ஆம்...
ஓர் சிறு அழுத்தம்
என் பார்வை
கதிர்களில் மட்டும்...!

2016.05.22

வீட்டிற்குள் தானே....!

தூய்மை என்று
மனிதன்
உலக எல்லையில்
நிறைக்கிறான்
அழுக்குகளை....

அவன் வாழ்வது
வீட்டிற்குள்தானே....

வீட்டு முற்றத்தில்
ஈக்களை 
விரட்டியடியுங்கள்
அவை உலக வாசலில்
போய் அமரட்டும்....

ஹ ஹ ஹ....
நீங்கள் வாழ்வது
வீட்டிற்குள் தானே....!

தேடல் தொடரும்....

சில மனங்களை 
பரீட்சிக்கிறேன்
உணர்வுகள் 
உரசிச்செல்லும்
இதயங்களில்
கவிதைத்தொட்டிலை
கண்டறிய...

எல்லாம் 
குப்பைகளாய்
குருதியோடு
பயணிக்கிறது....

கிளரிப்பார்க்கிறேன்
அந்த குப்பைக்குள்ளோர்
மாணிக்கத்தை....

விஷ நாகங்களாவது
கக்கிச்சென்றிருக்காதா....!

தேடல் 
தொடரும்.......