புதன், 17 பிப்ரவரி, 2016




என் அகத் தோழி
என் உள் உணர்வையும்
அழகாய் வர்ணிப்பாள்
என் உணர்வலைகள்
அவளுள்ளும்தான்
கடத்தப்படுகிறது போல...!

அவள் ருசிக்கும் 
உணவின் சுவையையும் 
என்னோடு பகிர்வாள் - அதை
நானே சுவைத்தது போலே
உணரச்செய்வாள்.....!

அவளுள் நிகழும் 
அணுமாற்றத்தையும் கூட
அறியச் செய்வாள்
சொல்லாமல் மறைக்க 
நினைக்கும் விசயத்தையும்
உலரி வைப்பாள்....!

ஆதாரமில்லாத 
ஆராய்ச்சியில்லாத அவள்
கற்பனையையும்தான்
அசட்டுத்தனமாய் 
முன்வைப்பாள்....!

அவளது இரகசியங்களாய்
என்னை மாற்றி வைப்பாள்
அவள் அன்பால் 
என்னை முழுமையாக்குவாள்...!

இவளே என் வாழ்க்கை தோழி
கல்யாணக் கலையில் 
இணைந்தப் பின் பிறர்
பார்வைக்கு இவள் என் மனைவி
ஆனப்போதும் எப்போதும்
இவள் என் அகத் தோழியே....!


.....பிரிய சகி.....
17.02.2016