வியாழன், 31 டிசம்பர், 2015

உன் பசி தீர்க்க.....




இந்த மழை நாளில்
நீ கொடுத்த முத்தம்
என் கன்னம் கழுவி
விழுகின்ற மழைத்துளிக்குள்
நிரம்பிட.....(நிறைந்திட)
இனி விளைகின்ற
(இனி விதைக்கின்ற)
நெற்கதிர்களிலெல்லாம்
உன் வாசம்தான்....
இனி.....
உன் பசி தீர்க்க
நான் பரிமாறப்போகும்
அன்பு விளைவாகவும்
இருக்கலாம்.....!

....பிரியசகி.

திருமணத்திற்கு முதல் இராத்திரி....





நடுசாம கனவில்

என்னைச் சுற்றி திரிந்த
வண்ணத்துப் பூச்சிகளை
நேரில் கண்ட 
உள உணர்விலே
வாழ்க்கையை ரசிக்கலானேன்
அந்த நேரம்.....


பல குழுக்களும்
பல விதமாக 
புரிந்துக்கொள்ளும்
கடவுள் உண்மையை
நான் ஒருத்தி அறிந்திட்ட
உள உணர்விலே
வாழ்க்கையை இரசிக்கலானேன்
அந்த நேரம்....

என் வீட்டு முற்றத்தில்
வந்தமரும் மைனாக்களை
பிடித்திடும் ஆசையில்
முன்னெடுக்கும் ஓரடியிலேயே
வழமைப்போல் பறந்திடாது,
என் கையில் தானே
வந்து அமர்வதான
உள உணர்விலே
வாழ்க்கையை இரசிக்லானேன்
அந்த நேரம்....

அன்றுதான் பார்த்த
குழந்தை ஒன்று
கண்ட மறுநிமிடமே
தாய் கை நழுவி
தாவி வந்து
தலை சாய்த்து 
என் நெஞ்சோடு 
ஒட்டிக்கொண்டதான
உள உணர்விலே
வாழ்க்கையை இரசிக்கலானேன்
அந்த நேரம்....

இன்னொரு வாய்ப்பாக
மனிதன் சீரழிக்காத
இயற்கை உலகை
கடவுள்
மீண்டும் ஒரு முறை 
உருவாக்கித்தரப் போகிறான் 
என்றதான
உள உணர்விலே
வாழ்க்கையை இரசிக்கலானேன்
அந்த நேரம்....

என்னோடு படுத்துறங்கும்
இறுதி இராத்திரியில்
கண்ணீரோடு 
தாயவள்.... 
மதி தடவி தலைக் கோதி
அகக்கண்ணில் 
முழுதாய் இரசித்து,
முத்தம் பதித்த 
அந்த நேரம்
இத்தனை நாள் வாழ்க்கையின்
அர்த்தம் உணர்ந்து
இரசிக்கலானேன்
அவள் பாசத்தை....!

"விடிந்தால் என் மகள்
இன்னொருத்திக்கு மருமகள்
இனி நான் தூரத்து 
சொந்தமாகிவிடுவேனோ...."
ஏக்கத்திலும் அச்சத்திலும்
தாய் உறங்க முயற்சிக்கையில்

அவளுடனான என் 
இறுதி இராத்திரியில்
நானும் அவளை 
அணைக்கலானேன்
தூங்குவது போன்ற என்
பாவனையிலேயே....!

....பிரியசகி....

வியாழன், 24 டிசம்பர், 2015

தனிந்தேன் இன்று....




தென்றலின் இதத்தோடு
இதயம்.
உணரத்தெரியாத 
உணர்வோடு உள்ளம்...

நினைவுகளின் தீண்டல்
நிதானம் இழந்து
நிதர்சனமாய் 
நிறுத்தமாடுகிறது
என் சிந்தையில்...

பதில் எதுவும் பேசாது
பரந்தவெளி என்னை
பரிகாசம் செய்கிறது...

சிரிப்பொலிகளோடு 
மிதந்த என் சுவாசம்
இன்று தான்
தனிமைப் பட்டு
கிடக்கிறது....

அழகு நட்சத்திர 
கூட்டத்திலிருந்து
துரத்தியடிக்கப்பட்டிருக்கிறேன்....
ஐம்பொறிகளும் 
அர்த்தமாக்கப்பட்ட
அபூர்வ வாசலுக்கு 
வெளியே.....

நேற்று என்னை
விட்டுச்சென்ற,
கடந்த வருடங்களில் 
எங்கள் மன பூமியில்
உலா வந்த வாழ்க்யை
தேடிப்பார்கிறேன்....

விடைப்பெற்ற
நட்புகளின் 
வாசனையை 
என் சுவாச அறைக்குள்
இழுத்து நுகர
எத்தனிக்கிறேன்....

என் உணர்வுகளோடு 
உறவாடிய தோழியின் 
தொலைவு 
உணரப்படுகையில்
அநாதையாகிவிடுகிறது
என் இதயம்....

என்னை சுற்றி 
மொய்த்த வண்ணமிருந்த
நண்பர்களின் ஸ்பரிசத்தின்
விலகலில் இன்று
நிரம்பிக்கொண்ட வளியும்
ஒரு வித எரிச்சலை 
ஊட்டுகிறது....

அனைத்துமாய் இருந்த 
கழக/கல்லூரி வாழ்க்கையின்
பார்வையிலிருந்து அகன்று
சமுதாய வாசலில் 
கைவிடப்பட்டிருக்கிறேன்....

இந்த மாற்றம்தனில்
மனம் குழைந்து
இழப்பு இரைச்சலில்
இதயம் கரைகிறது.....

இதயம் முழுதும்
சோகம் நிரம்பிட
தனிமையில் 
வாடிப்போகிறது இன்று,

ஆறாம் வயதில்
மலர ஆரம்பமான
மலரொன்று
எதிர்கால அச்சத்தோடு....!

பிரியசகி

திங்கள், 21 டிசம்பர், 2015

உன் கொஞ்சல்களில் நான்




வியர்வை துடைக்கும் 
தென்றலாக 
அவ்வப்போது உன் 
கொஞ்சல்கள்....!

நீ.....
"என் ச்செல்லமே..." 
என்கையில் என் 
உயிருக்குள் 
வாசம் கொள்கிறது 
உன் அன்பு....!

எப்போதாவது
உன் பேச்சு 
என் செவி தாண்டி
கண்ணீரை சுரக்கச்
செய்கையில்
மீளப்படும் புதையல் 
அவை....!

உன் திட்டல்களின் 
போது....
உன் கொஞ்சல்கள்
என் நினைவுகளில் வந்து 
ஆறுதல் சொல்கிறது....!

அன்பின் பரிமாற்றத்தில்
கண்ணீரும் 
காதலாகிப் போகும்
உன்னாலான 
வேதனையும்
தேவையாகிப் போகும்....!

உன் கொஞ்சல்களும் 
திட்டல்களும்
காதலொன்றை 
மட்டுமே 
தந்துவிடுகிறது...!

உன் அன்பின்
துடிப்பில் இயங்கும்
எனக்கு......!

....பிரியசகி....

காதலனாய் சில நிமிடங்கள்




...... ........ ........ ....... ......
என் இதயத்தை கிழித்து
அவளுக்கான அன்பு
எங்கே என தேடிட 
முயற்சிக்கிறாள்.....!

உதிரத்தோடு கலந்து
உயிர் வாழும் அன்பை
அவள் எங்கே என
தேடிப் பிடிப்பாள்....!

உரசி செல்லும் 
தென்றல் காற்று
அவள் உருவம்
காட்டிடும் கண்ணாடியில்
உருவமாவது சாத்தியமோ....!

அவளோடு பேசிடாத
இமைப்பொழுதுகளிலும்
என்னன்பில் குறைகண்டு
சித்தம் கலங்குகிறாள்...!

தொலைதூரமாகையில்
தொலைப்பேசியிலேனும்
குரல் கேட்டிடும்
ஆசையின் ஏமாற்றத்தில்
அவள் வலிகளை
வார்த்தைகளாக்குகிறாள்...!

அவளுக்குள் உலாவும்
அழகியல் அன்பை
உணர்த்திடும்
உறுதியில் தோற்றுப்போகிறாள்
என் உள அன்பு
புரியாத பாவியாய்.....!

அவள் என்னை எரிக்கும்
சாம்பலின் சூட்டில்
அவளும்தானே
நொந்துபோகிறாள்....!

"என் சகியே....
என் சுசியே....
என்னை உணர்ந்துகொள்...
எனதன்பில் பொய் கண்டு
நீயும் பொறுமை மறப்பதேன்...?"

என்றெல்லாம் 
காதுகடித்து கூந்தல் வருடி
செல்லமாய் என் மனம்
சொல்லவும்
தெரியவில்லை,
உழைப்பில் சிதைந்துபோன
என் சிந்தைக்கு...!

காதலியாய்..
அவள் கண் சிமிட்டும்
நேரத்தில்.....
கசிந்து வந்தன 
கனிந்த வார்த்தைகள் பல....!

கணவனாய்...
குடும்பத் தலைவனாய்
பொறுப்புக்களில் 
பொதிந்து கிடக்கிறேன்,
பல பிரார்த்தனைகளோடு 
இந்த நொடியும் கூட....!

குரலொலிகளில்
நளினமாய் வர
தயங்கிடும் வார்த்தைகள்
என் கவி வரிகளில் 
அவளுக்காக....
சில நிமிடங்களில்
பழைய காதலனாய்...!

வாழ்க்கை ஓட்டத்தில்
ஓடத்தொடங்கிய
இந்த கணவனின்
காதலை (என் காதலை)
என் மனதை விரும்பும்
மனைவியிடம்(அவளிடம்)
இசைக்கட்டுமே
என் கவி வரிகள்
இந்த நிமிடம்.....!

"என் அகம் விரும்பும்
அழகியே....
என் வாழ்க்கை பாதையில்
பூத்தவளே.....
உன் காதலை 
என்னிதயமருகில்
சாய்த்தவளே.....!

உன் அன்போடு
வாழப்பழகியது
என் நெஞ்சம்...
அதை மரணத்திலும்
தேடிடுவேன்
கொஞ்சம்
நீயே என் வாழ்வின்
உச்சம்....!"

இவ்வரிகள்
என்னவளுக்காக மட்டும்......!

.....பிரியசகி.....

முதல் முறையாக...!



உன் அலட்சியத்தையும் 
மீறி உனக்குள் நான் 
வந்திட மாட்டேன்...!

எனக்குள் ஓர் 
ஏக்கம்- அது
உனக்கானதல்ல என
சொல்லிக்கொள்ளதான்
விரும்புகிறேன்....!

உன்னை கவனியாது
செல்லவில்லை,
நன்கு கவனித்ததால்
செல்கிறேன்....!

யாரும் யாருக்கும் 
துணையில்லை 
என்பதை உணர்கிறேன்
முதல் முறையாக...!

....பிரியசகி

செவ்வாய், 8 டிசம்பர், 2015

காதலோடு (உன் காதல் சொல்லாயோ?)

உன் காதலுக்கு
நான் குழந்தையாக

என் காதலோடு 
நான் உனக்கு 
தாயாக

வரம் கேட்கிறேன்
கரம் கோர்ப்பாயா
என் இதயத்தோடு.....!

காதல் கருவுற்று
காத்திருக்கிறேன்....,

அது 
உன் அன்பால்
உன் உணர்வுகள் மீட்டும்
இசையோடு 
அன்பு கசிய நீ 
மொழியும் 
இராசி நிறைந்த 
அவ் வார்த்தையால்
பிரசவித்து
உன்னையே சேரும் 
நாள் வரை.....!

பிரியசகி 

புதன், 2 டிசம்பர், 2015

ஆசை








உன் மனதுக்குள்
அலைமோதும் ஆசைகளை
அறுத்தெறி..
உன் அறிவில் பதியும்
நிஜங்களை ஆசையாக்கு...!
...பிரிய சகி...

நிஜம்





நிஜம் என்று உணர்ந்திட
அவை எல்லாம் நிஜங்களாய் 
இருக்க வேண்டிய 
அவசியம் இல்லை
இவ் உலகில்... ! 
.....பிரிய சகி.....

தாய்க்கும் தாயாவோமே...





கருவுல என்ன சுமந்து
கடவுளா நெனச்சவ
பாரமா இருக்குதுனு
பகிரங்கமா சொல்லிடாம
பங்கயமா பிரசவத்துல
பெத்து என்ன எடுத்தவளே..!

"ஏ உயிரே போகுது..."னு
தொண்ட வத்த கத்துறப்ப
கலங்கிதா போயிருப்ப
கடசியா ஏ கரயல் கேட்டதுமே.!

"உயிர எடுக்கவ பாத்தவ..." னு 
வார்த்தைக்கு கூட சொல்லிடாம
வரமுனு கையில ஏந்தி
காஞ்சிபோயிருந்த உதட்டால
முத்தம் வச்சி சிரிச்சவளே...!

என்ன என்ன ஆசையோட 
என்ன நீ சுமந்திருப்ப
என்னாவா ஆவேனு 
என்ன நீ வளத்திருப்ப
செல்லமா கொஞ்சயில 
செலயாதா இருந்திருப்பே
என்னாவா இருக்கேனு
இப்ப எனக்குந்தா தெரியலயே...!

அவ நல்லா பாடுறா
இவ நல்லா படிக்குறா
அவ நல்லா பேசுறா
இவ நல்லா எழுதுறா்
நாலு பேரு எட்டு விதமா சொல்லுறப்ப
"ஏ புள்ள என்னதா செய்றா"னு யோசனையிலதா நொந்திருப்ப...!

கோவத்த கொறச்சி 
அறுவறுப்ப மறச்சி
பாசத்த நெறச்சி
பணிவிடயும் செஞ்சி
எனக்காக ஒன்ன நீ மாத்தி

மனசார வாழ்த்தின ஒன்ன
குழந்தயா நெனச்சி 
பணிவிட செய்ய மறந்துதா போவேனோ...அம்மா...!
உயிர் தந்த உயிரே..!

அன்னையர் தின வாழ்த்துக்கள்...!
அன்னையர் பாதம் போற்றி மகிழ்வோம்...!

...பிரிய சகி...

காலத்தின் பதிலை தேடி...





குருடனின் 
கிறுக்கல்களும்
அழகிய
ஓவியமாகலாம்...!

உள்ளது ஒன்றிருக்க
உள்ளங்கள் ஒவ்வொன்றும்
உண்மைகளென பல
சொல்லும்...!

கிறுக்கிய 
குருடனின் 
உள்ளம் மட்டும்
அமைதியாக...!

கடவுளின்
கிறுக்கலில்
என் தலைவிதியும்
அழகு ஓவியமாகிடகூடாதா...!

குருடனின் 
கிறுக்கலில்
அழகு ஓவியம்
காண விரும்புபவன்/ள்
யாரோ.....!

என்னை சுற்றிய
இதயங்கள் ஒவ்வொன்றும்
என் இதயத்தில்
எதையேனும் எழுதிடதான்
எத்தனிக்கின்றன...!

என்னை கிறுக்கிட்ட 
இறைவன் மட்டும்
அமைதியாக....
இன்னமும்...!
...பிரிய சகி...

நாட்குறிப்பேடு


என் நாட்குறிப்பில்
அர்த்தமற்று கிடந்த
காதல் கவிதையின் வரிகளை...
அர்த்தப்படுத்தி விட்டது
உன் பாச வார்த்தைகள்...!
...பிரிய சகி...

செவ்வாய், 1 டிசம்பர், 2015

காதலனாய் சில நிமிடங்கள்




என் இதயத்தை கிழித்து
அவளுக்கான அன்பு
எங்கே என தேடிட 
முயற்சிக்கிறாள்.....!

உதிரத்தோடு கலந்து
உயிர் வாழும் அன்பை
அவள் எங்கே என
தேடிப் பிடிப்பாள்....!

உரசி செல்லும் 
தென்றல் காற்று
அவள் உருவம்
காட்டிடும் கண்ணாடியில்
உருவமாவது சாத்தியமோ....!

அவளோடு பேசிடாத
இமைப்பொழுதுகளிலும்
என்னன்பில் குறைகண்டு
சித்தம் கலங்குகிறாள்...!

தொலைதூரமாகையில்
தொலைப்பேசியிலேனும்
குரல் கேட்டிடும்
ஆசையின் ஏமாற்றத்தில்
அவள் வலிகளை
வார்த்தைகளாக்குகிறாள்...!

அவளுக்குள் உலாவும்
அழகியல் அன்பை
உணர்த்திடும்
உறுதியில் தோற்றுப்போகிறாள்
என் உள அன்பு
புரியாத பாவியாய்.....!

அவள் என்னை எரிக்கும்
சாம்பலின் சூட்டில்
அவளும்தானே
நொந்துபோகிறாள்....!

"என் சகியே....
என் சுசியே....
என்னை உணர்ந்துகொள்...
எனதன்பில் பொய் கண்டு
நீயும் பொறுமை மறப்பதேன்...?"

என்றெல்லாம் 
காதுகடித்து கூந்தல் வருடி
செல்லமாய் என் மனம்
சொல்லவும்
தெரியவில்லை,
உழைப்பில் சிதைந்துபோன
என் சிந்தைக்கு...!

காதலியாய்..
அவள் கண் சிமிட்டும்
நேரத்தில்.....
கசிந்து வந்தன 
கனிந்த வார்த்தைகள் பல....!

கணவனாய்...
குடும்பத் தலைவனாய்
பொறுப்புக்களில் 
பொதிந்து கிடக்கிறேன்,
பல பிரார்த்தனைகளோடு 
இந்த நொடியும் கூட....!

குரலொலிகளில்
நளினமாய் வர
தயங்கிடும் வார்த்தைகள்
என் கவி வரிகளில் 
அவளுக்காக....
சில நிமிடங்களில்
பழைய காதலனாய்...!

வாழ்க்கை ஓட்டத்தில்
ஓடத்தொடங்கிய
இந்த கணவனின்
காதலை (என் காதலை)
என் மனதை விரும்பும்
மனைவியிடம்(அவளிடம்)
இசைக்கட்டுமே
என் கவி வரிகள்
இந்த நிமிடம்.....!

"என் அகம் விரும்பும்
அழகியே....
என் வாழ்க்கை பாதையில்
பூத்தவளே.....
உன் காதலை 
என்னிதயமருகில்
சாய்த்தவளே.....!

உன் அன்போடு
வாழப்பழகியது
என் நெஞ்சம்...
அதை மரணத்திலும்
தேடிடுவேன்
கொஞ்சம்
நீயே என் வாழ்வின்
உச்சம்....!"

இவ்வரிகள்
என்னவளுக்காக மட்டும்......!

.....பிரியசகி.....

திங்கள், 30 நவம்பர், 2015

உன் பெயர் என்ன...?




உன் கைகளைப் பற்றிக்கொண்டு

நரைமுடிகள்

சிரிக்கும் போதும்

அவற்றின் அதிகரிப்பை

கணக்கிட்ப்படியே

நடைபோட 

ஆசைக்கொள்ளலாம்...!
ஏழு ஸ்வரங்களுடன்

முட்டி மோதி

ஏழு அதிசயங்களையும்

மிஞ்சி எட்டாவததிசயமாக

என்னிதய வாத்தியத்தில்

உனக்காக ஒரு 

இசையை மீட்டிட 
எண்ணம் கொள்ளலாம்...!

என் அறிவை ஏமாற்றி

எனக்குள்ளே இயல்பாகும்

என் அறியாமையில்

உன் அன்பை ஏற்றிட

தோனலாம்..!

ஆயிரம் விளக்குகள்

ஓர் இடத்தில் ஒளிர

அந்த பிரகாசத்தின்

விட்டுக்கொடுப்பில்

வாழ்க்கை நடத்திட

விரும்பலாம்...!

உன் அன்னைக்கு

இன்னொரு சேயாகவும்

உன் நீண்ட வாழ்க்கைப்

புத்தகத்தின் ஏடுகளாகவும்

எதிர்ப்பாக்கலாம்...!

காலத்தின் மௌனம்

கலைத்து- அது 

உன் பெயரை என்

செவிகளின் மென்சவ்வும்

அதிர......

இரைச்சலின்றி தெளிவாக

சொல்லிவிட்டுச் சென்றால்....!
...பிரிய சகி...