சனி, 27 ஆகஸ்ட், 2016

தங்கைகளின் தேடல்

வேரொரு ஆண்
மடி சாய்ந்தால்
காம கொடுரன்
என்றே நினைத்திருந்தேன்....

ஆண் தொடுகையிலிருந்து
கவனம் காக்க
சொல்லியுமிருந்தாள்
தாய்....

முதல் முறை
பனிபடர்கள் மேல்
சூரிய கதிர்கள்
பாசகுளிராய் இருந்தது....

வானும் நகல்
எடுத்திருக்கும்
விஞ்ஞானிகள் பெயர்
தேடுகிறார்கள்....

அன்றைய நாள்
மேகம் சேர்ந்த
புது வான் காட்சிக்கு....

அவன் மடிசாய்ந்தான்
பாசம் ஒன்றைத்தவிர
வேரொன்றையும்
உணரவில்லை....

எத்தனை அழகான
ஆண் அவன்
நல்லவன் என
உணர்ந்தப் பின்னே....

அதற்கு முன்
கறுத்தவொரு
வெறும் 
பிண்டம்தான்....!

பிரியசகி
27.08.2016

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

அழகெல்லாம் அழகில்லை

அழகெல்லாம்
அழகில்லை
உண்மையில் இங்கு 
யாரும் அழகை
அடையாளம் காணவில்லை
அர்த்தமற்ற அழகு
அடையாளமின்றியே போகும்,
ஆனந்தம் தருவது மட்டும்
அழகில்லை
துன்பத்தையும் அழகென
உணர்வது அழகு....
சிக்கலுள்ள வாழ்விலும்
உளநிறைவடைவது
அழகோ அழகு....
தன்னை சுற்றியுள்ளவர்களை
மகிழ்ச்சியோடு வைத்திருப்பது
அழகு....
கொஞ்சிக் குலாவுதலில்
மட்டும் பாசத்தை 
நம்பாது,
தூரம் நிற்கும்
உண்மையில் 
மறைமுக பாசத்தை
அனுபவிப்பது
அடடா... 
எத்தனை அழகு....
தனக்கு பிடித்தவர்
நலனுக்காய் பிராத்திப்பது
உண்மையாகும் அழகு....
பிடித்தவர்களுக்கு
பிடித்ததைத் தேடிபெற்று
வழங்கும் போது
நிலையான அழகு...
பொய்யை ஏற்கத்தெரியாமல்
உண்மையோடு
வெகுளியாய் இருப்பதுக்கூட
அழகுதான்....!
இந்த
அழகான மாலையை
அணிய விரும்புவது
ஆழமான அழகு....!

25.08.2016
பிரியசகி

வண்ணத்துப்பூச்சு

வண்ணத்துப்பூச்சு
குரலொலி
கேட்க விரும்புகிறேன்
அது தன் நிறங்களின்
அழகை கண்பது
எந்தக் கண்ணாடியிலாம்...?

தன் மேனி ஓவியங்கள்
பற்றி என்ன நினைக்கிறதாம்?
அவலட்சனத்தில் பூத்த
பூவென்று
தாழ்வு கொள்கிறதாமோ...?
இல்லை,
இயற்கை உமிழ்ந்த
எச்சில் சாயம்மென்று
அருவெறுப்புக்கொள்கிறதாமா...?

தன் இறக்கைகள் 
பற்றி நினைப்பது
என்னவாம்...?
அண்டவெளியில் காற்றோடு
போராடும் உறுதியில்லா
சருகு என
நொந்துகொள்கிறதாமா...?
பூமியின் ஈனப்பிறவிக்கான
அடையாளம் என
சலித்துகொள்கிறதாமா....?

வண்ணத்துப்பூச்சியின்
குரலொலியை
பதிவுசெய்து தாருங்களேன்...
இல்லையேல்
என்னிடம் பேசச்செய்யுங்கள்....

நாங்கள்
உன் அழகையும்
உன் சுதந்திரத்தையும்
சொல்லி சொல்லி
வாயூரிப்போகிறோம்.
உண்மையில் நீ உன்னைப்பற்றி
நினைப்பது என்ன...?

என்பதைக் கேட்டுத்
தெளிந்துக்கொள்கிறேன்...!

பிரியசகி
25.08.2016

புதன், 24 ஆகஸ்ட், 2016

அழகொன்றும் அதிசயமில்லை

அழகொன்றும்
அதிசயமில்லை
அழகுக்கு அர்த்தம்
அவள் தான்,
அழகைப் புரட்டி
படிக்கத் தெரிந்தவள்,
அழகைப் பூசிக்கொள்ள
மறக்காதவள்,
ஒரு போதும் 
அழகைத் தேடி 
களைத்திடமாட்டாள்,
அழகை உருக்கி
ஆயுதமும் செய்வாள்,
அழகை வார்த்து
மொழிகளும் சமைப்பாள்,
வண்ணத்துப்பூச்சியின்
இறக்கைகளில் 
ஒட்டிக்கொள்வாள்,
காக்கைகளின் சொண்டில்
தேன் உறிஞ்ச முற்படுவாள்,
குப்பைத்தொட்டி
உடைந்தக் கண்ணாடியிலும்
தன்னை அழகுபார்ப்பாள்...
யார் அவளை காணாவிட்டாலும்
அவள் அவளை பார்ப்பாள்
இல்லாத கண்களால்
அல்ல,
உதடுகள் மறுத்தாலும்
சிரித்துக்கொண்டேயிருக்கும்
அவள் உள்ளத்தால்....!

அதோ...
தன் அழகுக்கு ஒத்துவரும்
ஆடையை தேடி
ஓய்ந்துபோன
மங்கையின் முகம்
அவள் உள்ளத்துக்குள்
செல்ல மறுக்கிறது....!

பிரியசகி
25.08.2016

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

மகள்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் இல்லையென.....

வாழ்க்கையைப்
பிழிந்தெடுத்த
சாரில்
இருள் வான்
நிலவொளியும்
ஒளிந்திடும்....!

எரியும் நட்சத்திர 
மினுங்களும்
எட்டியேனும் பார்க்காது....!

தெளிவற்ற சிக்கல் 
நாளும் வேகும்
நெஞ்சில்....!

முடிச்சுகள் தொடரும்,
ஓய்ந்துப் போகும்
உள்ளம்
உளநிறைவைத்
தேடி....!

வற்புறுத்தி எடுப்பித்த
மகிழ்ச்சியும்
தண்ணீரில் அணையும்
நெருப்பு.....!

பெண்களுக்குப்
பிடித்த
தந்தை உறவை
கொண்டாடிட
அவள் மட்டும்
விரும்பாமலில்லை....!

பாவம் அவள்,
மது மணத்திற்கு
முத்தமிட 
இன்னமும் 
பழகிடவில்லை....!

வந்து வாய்க்கும்
உறவாவது
விரும்பி 
அணைக்கும்படி
அமையுமோ என்னமோ....!

இல்லையெனில்,
சம்பிரதாயம் 
உறவிலும் 
வெறும் உடல்
பிணமாய் கிடப்பாள்....!

சம்பிரதாய சமுகத்தில்
அதை மறுக்கத்
தெரியாதவளாய்....!

பிரியசகி
21.08.2016

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

விண்ணுலகம் அழைத்தானோ........?


ஆனந்த
யாழைக் கொண்டு
மீட்டினாய் 
உள்ளத்தை உருகிட
செய்யும் பல
வண்ணக் கவிகளை.....

உன்
பேனா மை தொட்டு
பிறந்த கவிதைகளும்
கண்ணீர் சிந்துதய்யா
எங்களைப் பிறசவித்த
தாய் எங்கே என்று...........
அகரம் முதல்
சிகரம் வரை - உன்
பேனா மை தொடாத
இடமும் இல்லை...
அரிச்சுவடியில் - நீ
ஸ்பரிசிக்காத
எழுத்துக்கழும் இல்லை....
நீ
பெற்றெடுத்த
கவி முத்துக்களுக்கு
ஈடு இணையும் இல்லை.....
உன்னைப் போல்
கவிஞனை
இனி உலகம்
காணப் போவதும் இல்லை.......
எழுத்துக்களும்
வைரமானதன்
அதிசயம் கண்டேன்
உன்
எண்ணங்கள்
காகித ஏடுகளில்
குழந்தையாக
தவழ்கையில்.........
மண்ணுலகில்
நீ வடித்த
கவிகளின் சுவையை
ருசித்திடத்தான்
அழைத்தானோ இறைவன் உன்னை
விண்ணுலகிற்கு.......
முகில் கூட்டங்கள்
வந்து போர்வை
விரித்திட
உன் இறுதிப்பயணத்தில்
பயணிக்கிறாய்
உன்
கவிதைகள் தந்த
சோகத்தில்
எம்மை
ஆழ்த்தி விட்டு.......

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

வியர்வைத்துளி

சாலையோரப்
பூக்களைக் கடந்துவரும்
காற்று நாசியினூடே
பரவிச்செல்ல....

தணல் பூத்த
தேகத்துக்குள்
நிலைக்குத்தாய் நின்று
பனிக்கட்டிகளாய் பதிந்து
உருகி பரவலானான்...!

தேகமெல்லாம் 
அவன் வாசம்
நெஞ்சமெல்லாம்
அவன் சுவாசம்....!

எத்தனை லேசாய்
நகர்கிறது இத்தேகம்
அவனுக்காய் கடக்கையில்
இச்சாலை வழியில்....!

தேகவாசம்
குருதியோட்டத்திலும்
பயணம்....
நினைவு நரம்பு
தூண்டல்...

அவன் கண்ணுக்குள்
வேப்பம் பூவின்
தேன்த்துளியில்
என் உயிர்த்துளியைத்
கலந்து நீந்தச்செய்வேன்....!

எனக்கும் அவனுக்குமான
இடைவெளியில்
சுற்றுகின்ற பம்பரத்தின்
மேற்பரப்பில்
சொல்ல தயங்கும்
ஆசைகளை அடுக்கி
பொருத்திடுவேன்....!

அசட்டுத்தனமான
தலைக்களைப்பையும்
வித்தியாசமாய் 
செய்திடும் அவன்
கைக்குள்,

குனிந்திட
என் தலையும்
லேசாய் அசைந்து 
வெட்கப்படும்....!

சிரிப்பிற்கு வஞ்சகமாய்
வார்த்தைகளையும்
விழுங்கி....
சொல் பாதியும்
செயல் பாதியுமாய்
நெஞ்சில் பதிவான்....!

சேர்ந்து நடக்கையில்
கைகள் உரச
காற்று முத்தமிட்டுச்
செல்லும்....
அவன் பார்வைக்குள்
நான் சிக்கி கிடப்பேன்....!
******
அடடா....
வந்து சேர்ந்ததுவே
கால்கள்...

தாவணி அலையும்
காற்றுமாய்
நானும் என்னுள்ளமும்....!

எங்கே அவன்
நிமிடங்கள் நகர்ந்தது....
ஏக்கங்கள் அழுகையாகி
ஒளிந்தது....!

திரும்பி நடந்த
கால்கள் 
கோவில் கோபுர
நிழல் கடந்து 
செருப்பை மாட்டிக்கொள்கையில்

ஆத்மப்புள்ளியை
தொட்டது 
ஒரு துளி வயர்வை
பாதம் நனைந்தது
ஒரு புள்ளியில்....!

பாதம் விட்டு 
செருப்பை அகற்றியப்படி
ஒரு உருவம்....
என்னுயிர் பொதிந்த
உருவம்....!

களைப்பும் வியர்வையுமாய்
முகம் உயர்த்த 
தயங்கியப்படி அவன்
அவ் முகம் நிமிர்தலுக்காய்
நான்....!

2016.08.11

புதன், 10 ஆகஸ்ட், 2016

மணமிழந்த மல்லிகை

சூட்டோடு ஒளி 
இணையும் மணலில்
இரு உள்ளங்கள்
நிழலாட....,
மற்றொன்றை அவனுள்
தேடுகிறான்...!

தென்றலின் அதட்டலில்
நடுங்கும் கிளைகள்
கதிரவன் கொதிப்பில்
நிலம் விழ
அவளும் அவனுள்ளம்
உலாவுகிறாள்...!
**** **** ****

எதுகையும் மோனையும்தான்
ஒரு கவிதையில்
முத்தம் கொழுவிக்கொள்ள
உதடுகள் தேடுகிறது....!

அவன் கன்னங்கள்
பால் பருகும் 
பூனையின் நாவில்
தொக்கி நிற்க....,

அவள் பருகிய பால்
மிஞ்சிக் கிடக்கிறது
அவன் கன்னங்களில்,
அவளின் தொடர் பருகலுக்காய்...!

அவள் குரலொலி
படிந்து தீர்ந்த
அறைச்சுவர்கள்
தீட்டிக்கொண்ட
அவள் வடிவ 
ஓவியத்தோடு அவனும்...,

அவள் கொட்டித் தீர்த்த
கதைகளை 
உளரிடும் சுவர்கள்,
அவள் போல் பெயரழைக்கும்
அதிர்வலைகள் 
அவன் தனிமைக்கருகில்
தீ மூட்டுகிறது...!

**** **** ****
பட்டாம்பூச்சியாய்
அவன் ஆயுள் ரேகையில்
பயணித்து
விவாகரத்தில்
வீனணயின் இழையறுத்தவள்
அவள்....!

சாயம் படிந்த 
கை ரேகைகள்
அவன் மயானம்...!

....பிரிய சகி....
2016.07.31